Tuesday 1 April 2014

கலகம் - இலக்கியச் சந்திப்பு

கலகம் தமிழ்தேசிய திங்களிதழின் அறிமுகம் மற்றும் இலக்கியச் சந்திப்பு 31.03.2014 அன்று காலை 11 மணிக்கு பெரம்பலூர் மெளலானா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு பெரம்பலூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.சங்கர் அவர்கள் தலைமை வகித்தார். 
திரு. எம். ரஷீத் அஹமத் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 

கவிஞர். அகவி, ஆ.இராமர், ஆகியோர் முன்னிலை வகிக்க மருத்துவர். கோசிபா அவர்கள் உரையாற்றினார்

இயக்குனர் வ. கீரா அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர். ஜெ. சங்கர் பொன்னாடை அணிவித்து மகிழ்கிறார்.

’காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் குழுவின் கவிஞர். இரா.எட்வின் அவர்களும் வ.கீராவுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்கிறார்.

பெரம்பலூர் வாசகர்களின் சார்பாக வ.கீராவிடம் கலகம் இதழுக்காக பத்து நபர்களுக்குரிய ஒரு ஆண்டுச் சந்தா கொடுக்கப்பட்டது.

 மருத்துவர்.கோசிபா அவர்களின் ஒரு ஐந்தாண்டுச் சந்தாவும் கொடுக்கப்பட்டது. 

  கவிஞர். இரா.எட்வின் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்...

. கலகம் ‘ இதழின் நிர்வாகக்குழு உறுப்பினரும் பச்சை என்கிற காத்து திரைப்படத்தின் இயக்குனருமான வ.கீரா அவர்கள் சிறப்புரையாற்றினார். 

இந்நிகழ்வில் தமிழ்பாலன்,  அம்மாப்பாளையம் ஆசிரியர் ஜெயராமன், மேலப்புலியூர் ராஜேஷ், வாசகர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியினை இ. தாஹீர் பாட்சா தொகுத்து வழங்கினார்.

 இறுதியாக ப. செல்வகுமார் என்கிற நான் ( கூச்சம் )  நன்றியுரையாற்றினேன்.


நிகழ்வுக்கு பின் வ.கீராவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் மகிழ்வாக....

நிகழ்வில் கலந்துக் கொண்ட மாணவர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்...ஆமா இதுக்கு எதுக்கு மாணவர்கள் என்று தானே கேட்கிறீர்கள்..? ‘ கலகத்தை ‘ எங்கிருந்து தொடங்கிறது ? இங்கிருந்துதான்....

இனி கலகம் செய்வோம்.....