Monday 22 August 2016

திருச்சி தில்லை நகர் இரண்டாவது குறுக்குத்தெரு எஸ்.ஆர்.டி. ஹாலில் 25.6.2016 அன்று நடைபெற்ற தேசிய பணத்தாள் & நாணய கண்காட்சியில் ...






























ஷேர் ஆட்டோவில் டிவி
லேப்டாப்பை டாப்ல செட் பண்ணி தான் ஓட்ற ஷேர் ஆட்டோவில பயணிகளுக்கு டிவி எபெக்ட் கொடுக்கிற இந்த தம்பி ஒரு வில்லேஜ் விஞ்ஞானி தான்.
" ஆமாந் தம்பி , லேப் டாப்பு தலைகீழாத் தொங்குது , படம் நேராத் தெரியுது எப்பிடி ? "
' சார் , ஸ்கிரீன் செட்டிங்க்ல போய் ரொட்டேட் கொடுத்தேன் ..'
# பெரம்பலூர் பெருமிதம்


கடந்த 7.8.16 அன்று மயிலாடுதுறையில் தொடங்கி 12.8.16 ஆத்தூரில் நிறைவடைந்த தோழர். கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலான திராவிடர் விடுதலை கழகத்தின் " அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம் " மேற்கொள்ளும் தோழர்கள் 11.8.16 அன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கும் , பழைய பேருந்து நிலையத்தில் இரவு 7 மணிக்கும் பிரச்சாரம் செய்தனர்.
அதுசமயம் தோழர். தாமோதரன் உள்ளிட்ட இருபது பேர் நிறைந்த தோழர்களை சந்தித்து பரப்புரைப் பயணத்திற்கு த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா , இ. தாஹீர் பாட்ஷா , ப. செல்வகுமார் ஆகியோர் நிதியுதவி அளித்தப் போது....

15.8.2016 அன்று நன்பகல் 12 மணிக்கு கல்லாறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்கள்  குழுவினரின் சுதந்திரதின சிறப்புப் பட்டிமன்றத்தின் புகைப்படக்காட்சிகள்...














புதிய கோடாங்கி ஆகஸ்ட் 2016 இதழில் வெளியாகியிருக்கும் எனது கவிதை...

Tuesday 9 August 2016

அரியலூர் புத்தகத் திருவிழாவில் எனது கவிதை நூலினை படிப்பதுப் போல எனது அன்பு மாணவர்கள் என்னைக் கலாய்த்தப் போது...


கந்தர்வக்கோட்டை த.மு.எ.க.ச 9.7.16 அன்று கிளைக் கூட்டத்தை நடத்தியது.
அதில் புலியூர் முருகேசன் அவர்களின் " உடல் ஆயுதம் " நாவலை கோ.கலியமூர்த்தியும் , எனது " ஒரு மழை வந்து போகவேண்டும் " கவிதை நூலை கவிஞர்.இராஜேந்திரன் அவர்களும் நூல் விமர்சனம் செய்தனர்.
கவிஞர்.தணிக்கொடி , வே.தமிழரசு , நரேந்திரன், உத்தம்சிங் , இராமநாதன் , மதியழகன் , மிடறு முருகதாஸ் , அண்டனூர் சுரா , மணிகண்டன் , முத்துக்குமார் ..என ஆளுமைகளால் நிறைந்திருந்தது கூட்டம்.
கலந்துக்கொள்கிற எல்லோருமே படைப்பாளிகளாய் , கவிதை வாசிப்பு , உரை என பங்கேற்கிற சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தார்கள்.
மாவட்டப் பொருளாளர் Stalin Saravanan ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்விற்கு கோவி.ஆறுமுகம் தலைமையேற்க , செயலாளர் கே.பாக்யராஜ் வரவேற்புறையாற்ற பொருளாளர் பாரதிராஜா நன்றியுரையாற்றினார்.
விமர்சனத்தை விட ஒரு படைப்பாளிக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.
# கந்தர்வக்கோட்டைக்கு நன்றி


















பழனி ஷகான் எழுதி காக்கைச் சிறகினிலே ஜூலை 2016 இதழில் வந்திருக்கும் எனது கவிதை நூல் குறித்த விமர்சனம்...


அரியலூர் புத்தகத் திருவிழாவிற்கு உரையாற்ற வந்திருந்த பாவலர்.அறிவுமதி அவர்களோடு 20.07.2016 அன்று ஒரு இனிய மதிய வேளையில் சந்தித்து பேசி மகிழ்ந்த நெஞ்சை விட்டு அகலாத தருணங்கள்...
21.07.2016 அன்று எனது துறையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களோடு அரியலூர் புத்தகத் திருவிழாவினை காணச் சென்ற பொழுதுகளில்...