Monday 29 July 2013

சொம்புலோகம்

கோபுரச் சொம்பு
கலசம்

வயிறு
நடுச் சொம்பு

பாதச் சொம்பு
கடலை

சொம்புகளின் உலகம்

மிளகாயில்

மிளகாயில் அழுத அம்மிக்கு
மருதாணி பூசியவள்
நீ

நாம் தனிமை

நாம் தனித்துக் கிடந்த
இரவின் வெளியெங்கும்
மின்மினிப் பூச்சிகள்

கண் விழித்த ஹைக்கூ

கவிதைகளை தூங்க வைத்து
நாம் கலந்தபோது
விழித்துப் பார்த்தது
ஒரு ஹைக்கூ

வெட்கத்தின் பற்கள்

நீ
மருதாணியிட்டதும்
வெட்கத்தின் பற்கள்
நகங்களாயின

புறக்கனிப்பின் சொற்கள்

நீ புறக்கனிப்பது இருக்கட்டும்
உன் இதயத்தில் இருக்கும்
என் சொற்களை
என்ன செய்யப் போகிறாய்..?

காதலும் வெட்கமும்

உன் காதல் பிறந்த
நொடியில் தான்
என் வெட்கமும் பிறந்தது

காதலின் முச்சந்தி

உன் தேவகுமாரனது கனவில் நானும்
என் தேவதைகளின் கனவில் நீயும்
வரவில்லையெனினும்
நாம் சந்தித்துக் கொண்டோம்
காதலின் முச்சந்தியில்

வயல்களின்

வயல்களின் ஈரத்தை
வரப்புகளின் பசுமை
பிரித்தது

ஆப்பிள் மரத்தடியில்

ஆதாமும் ஏவாளும் சந்தித்த
ஆப்பிள் மரத்தடியில்

காத்திருக்கிறேன்
வந்து விடு ..

ஆதாம் ஏவாளிடம்

ஆதாம் ஏவாளிடம்
தனியே கேட்க வேண்டும்
முதலிரவா ?
முதல்பகலா ?

ஏவாளின் வெட்கம்

ஏவாளின் வெட்கம் பற்றி 
ஏன் நீ
எந்தக் கவிதையும் எழுதவில்லை
ஆதாம்

ஆடைகளுக்கு

ஆடைகளுக்கு முன்னமே
வெட்கத்தை உடுத்தியவள்

நீ

பக்தி

பக்தி என்பது
விபூதியில் இல்லை
உன்
தொடுகையில்

மரணத்தைப் போல

மரணத்தைப் போல
வேறொன்றும் உணர்த்துவதில்லை
வாழ்க்கையை

Saturday 27 July 2013

ஒரு ரூபாய்

உன்னிடம் இருந்த
ஒரு ரூபாய்
மெல்ல மேலேறி
என் நெற்றிக்கு வந்துவிட்டது

விசும்பல்

விசும்பல் குரல் கேட்கும்
வெளிநாட்டுக் கணவனுக்கு தெரியாது
செல்போன்களை நனைத்த
கண்ணீர்...

Friday 26 July 2013

பச்சையோலைகளுக்கு



பச்சையோலைகளுக்கு பின்னால்
உன்னை
முதன்முதலாய் பார்த்தபோது
புரியவில்லை
நீ
புயல்கள் சுமந்த மரமென்று

நட்சத்திரங்கள்



நள்ளிரவைப் பற்றித் தெரியும்
ஆனால்
நட்சத்திரங்கள் பற்றி
நீதான் கற்றுத் தந்தாய்...

கவ்வி..



பேசிக் கொண்டேயிருந்தவனை
கவ்வி..
முத்தமிட்டுச் சொன்னாய்
உதடுகள்
பேசுவதற்கானதல்ல

வீசியெறிந்த

நீ
வீசியெறிந்த வார்த்தைகளை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என் காயங்களில்...

இனியும்

இனியும்
உன்னிடம்
அழுவதில்லை...

கனவுத் தோட்டத்தில்

என்
கனவுத் தோட்டத்தில்
ஒருநாள் நீ வந்தாய்

பூக்களுக்கு அருகில் நின்றாய்
உன் புன்னகைகளின் பதியமென்றேன்

கிணற்றடியில் நின்றாய்
உன் கூந்தலின் குடியிருப்பென்றேன்

மின்னலைப் பார்த்து நின்றாய்
உன் வெட்கத்தின் வெள்ளிவிழா என்றேன்

கனிகளைப் பார்த்து நின்றாய்
உன் இதழ்களின் இனைப்பு என்றேன்

என்னையே பார்த்து நின்றாய்
இப்போதே இறந்து விடவா என்றேன்.

வாழ்க்கை

நீங்களெல்லாம் இருக்கீங்கன்னுத்தான்
நானும் இருக்கேன்
உயிரோடு...

வாழ்க்கை

பொம்மை



என்னை
குழந்தையாக்கும்
பொம்மை
நீ

உன்னைப் பற்றித்தான்



உன்னிடம் சேராமல்..
செத்துப் போன
எனது சொற்களின்
மாநாடொன்று நடக்கிறது
வருகிறாயா ?

உன்னைப் பற்றித்தான்

என் பலூன்களை

என் பலூன்களை உடைக்கும்
ஊசியாகவே இருக்கின்றன
உன் சொற்கள்

முதலில் பெற்ற முத்தம்

முதலில் பெற்ற முத்தம்
உதடுகளுக்கு நினைவில்லை
இதயமோ மறக்க வில்லை

இதழிலா
இதயத்திலா

அன்றைக்குத்தான் வான்வெளியை கண்டேன்
நானும் நட்சத்திரங்களும் மட்டும்தான் இருந்தோம்

என் முத்தக் கறையோடு நிலவு தள்ளி நின்றது...

வெட்கத்தின் திருவிழா

கோள்கள் சுற்றிக் கொண்டிருந்ததைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை

இளமை முதுமை



" இந்த பஸ் அந்த ஸ்டாப்பிங்ல நிக்குமா”...ன்னு கேட்டுட்டு ஏறுனா - முதுமை

பஸ்ஸுக்குள்ள ஏறிட்டு நிக்காத ஸ்டாப்பிங்குக்கு டிக்கெட் எடுத்தா - இளமை

இளமை Vs முதுமை

முட்டாங்கண்ணுன்னு



என்னை
முட்டாங்கண்ணுன்னு கூப்பிட்ட
எங்கக்காவுக்கும் முட்டாங்கண்ணு
ஆனா நான்
கூப்பிட்டதேயில்லை

பத்தவைக்கனும்



வலதுகை உடைஞ்சு கட்டுப் போட்டுகிட்டு சிகரெட்டை வாயில வச்சிகிட்டு தீப்பெட்டி கேட்டா...அங்கத்தான் நாம பத்தவைக்கினும்.

தந்தை சுகம்

என் கவலைகளின் கால் செருப்பை குழந்தைகள்தான் கழற்றி விடுகின்றன வாசலுக்குள் நுழையும் போதே
தந்தை சுகம்

Friday 19 July 2013

தோற்றுத்தான் போனேன்....

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (19.07.2013 ) இலக்கியமன்ற விழா மற்றும் பத்து , பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைப் பெற்றது. என்னை விருந்தினராக அழைத்திருந்தார்கள். 

உள்ளூரில் உள்ள ”இலக்கியச் சாரல்”, ”உளிகள்”, ”உன்னை அறிந்தால்” போன்ற அமைப்புகளின் உதவியோடு விழா இனிதே நடைபெற்றது. தோழர்.ம.செல்வபாண்டியன், தாஹீர்பாட்சா, இராசபாண்டியன் என்று அந்தப் பள்ளியில் பணியாற்றுவது போலேவே இருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். மகிழ்ச்சியான வேளை. நிறவான விருந்தோம்பல்.

பேச்சினூடே மாணவர்களிடம், கவர்வதற்காக ஒன்றைச் சொல்லி அதை யாரேனும் திரும்பச் சொல்ல முடியுமா என்று கேட்டேன். நான்கைந்து பேர் முயற்சித்தார்கள். ஒருவர் வெற்றியின் அருகில் வந்தார். அது இதுதான் –
“ குரங்கு குளத்தில் குந்தியிருந்தது குறவன் குச்சியால் குத்தினான் குரங்கு குளத்தில் குபீரென குதித்தது “



பேசி முடித்ததும் இரண்டு மாணவிகள் என்னருகில் வந்தார்கள். ”நான் ஒன்னு சொல்றேன் நீங்க சொல்றீங்களா ?” .தோற்றுத்தான் போனேன். அவர்கள் சொன்னது : “
” ஓட்ட ஓட்டமா ஓடிப்போயி ஓணான புடிக்கப் போணானான், ஓடிவந்தவன ஓணான் ஓடஓட விரட்டுச்சான் “

மாணவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

Friday 5 July 2013

பிச்சைக்காரனுக்கிருக்கிற

பிச்சைக்காரனுக்கிருக்கிற
துணிவை சிலாகித்தேன்
விபச்சாரிகளை
உணராமலே

Thursday 4 July 2013

மதம் மசூதியை

மதம்
மசூதியை இடித்தது

சாதி
தாஜ்மஹாலையே
புதைத்திருக்கிறது

மிருகங்களின் நாட்டில் 
மனிதம் சிறுபாண்மைதான்

Wednesday 3 July 2013

மயிலிறகு குட்டிப் போடாத

மயிலிறகு 
குட்டிப் போடாத
நோட்டுப் புத்தகங்கள்
குழந்தைகளை
விளையாட விடுவதில்லை

Tuesday 2 July 2013

நீ வருவதாய்

நீ
வருவதாய் சொன்ன இரவில்
நான்
விடியும் வரை
காத்திருந்தேன்

எந்த கவிதையும்

எந்த கவிதையும் எழுத முடியாமல் திணறுகிறேனே ?

என் கவிதைகளை திருடியது நீயா ?

எங்கூட ஆறாம் வகுப்பு

எங்கூட
ஆறாம் வகுப்பு படித்த
ராஜேஸ்வரியை விடவா
அவ அழகு ?

விஷம் போல்

விஷம் போல்
து

கி
று

நீ கொடுத்த முத்தம்

என் கவிதைகள்

என் கவிதைகள்
செத்துப் போன ஓர் நாளில் தான்
உன்னை
திருமணம் செய்து கொண்டேன்

நீ படிக்காமல்

நீ
படிக்காமல் கிழித்தெறிந்த
காகிதத்தில் தானடி
ஒளிந்திருக்கிறது
நம் காதல்