Friday 19 July 2013

தோற்றுத்தான் போனேன்....

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (19.07.2013 ) இலக்கியமன்ற விழா மற்றும் பத்து , பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைப் பெற்றது. என்னை விருந்தினராக அழைத்திருந்தார்கள். 

உள்ளூரில் உள்ள ”இலக்கியச் சாரல்”, ”உளிகள்”, ”உன்னை அறிந்தால்” போன்ற அமைப்புகளின் உதவியோடு விழா இனிதே நடைபெற்றது. தோழர்.ம.செல்வபாண்டியன், தாஹீர்பாட்சா, இராசபாண்டியன் என்று அந்தப் பள்ளியில் பணியாற்றுவது போலேவே இருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். மகிழ்ச்சியான வேளை. நிறவான விருந்தோம்பல்.

பேச்சினூடே மாணவர்களிடம், கவர்வதற்காக ஒன்றைச் சொல்லி அதை யாரேனும் திரும்பச் சொல்ல முடியுமா என்று கேட்டேன். நான்கைந்து பேர் முயற்சித்தார்கள். ஒருவர் வெற்றியின் அருகில் வந்தார். அது இதுதான் –
“ குரங்கு குளத்தில் குந்தியிருந்தது குறவன் குச்சியால் குத்தினான் குரங்கு குளத்தில் குபீரென குதித்தது “



பேசி முடித்ததும் இரண்டு மாணவிகள் என்னருகில் வந்தார்கள். ”நான் ஒன்னு சொல்றேன் நீங்க சொல்றீங்களா ?” .தோற்றுத்தான் போனேன். அவர்கள் சொன்னது : “
” ஓட்ட ஓட்டமா ஓடிப்போயி ஓணான புடிக்கப் போணானான், ஓடிவந்தவன ஓணான் ஓடஓட விரட்டுச்சான் “

மாணவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

1 comment:

  1. மன்னிகனும் இறகுகள் அமைப்பை குறுப்பிட மறந்துவிட்டீர்களா?

    ReplyDelete