Tuesday 17 March 2015

நீல் ஆம்ஸ்ட்ராங்க்கும்....

நிலவில் கால்வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின்
கைப்பிடித்தவரை கரம்குலுக்கினேன்..
இன்று ( 04.03.2015 ) பயிற்சியில் எங்களுக்கு வகுப்பெடுக்க வந்தவர் பேராசிரியர். மோகன் சுந்தரராஜன். இவரைப் பற்றிய அறிமுகத்தினை கேட்ககேட்க வியப்பின் விளிம்பில் விழுந்தேன்.

பேராசிரியர். மோகன் சுந்தரராஜன் பிரபலமான அறிவியல் எழுத்தாளர். கடந்த நாற்பது ஆண்டுகளாக மின்னனுவியல் மற்றும் அச்சுத்துறையில் இவரது பங்கு குறிப்பிடும்படியானது.
இணையம், விண்வெளி, நேனோ, ஆப்டிக்கல் ரேடியோ அஸ்ட்ரானமி என பல்வேறு துறைசார்ந்த அறிவு கொண்டவர்.
சென்னைப் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று புத்தில்லியில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரும் பதவி வகித்தவர். அதுசமயம் இந்திய அரசு சார்பில் இலண்டன் சென்று தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்.
1972 ஆம் ஆண்டு தி சோவியத் லேண்ட் நேரு விருது, ஆகாசவானி விருது, இந்திய அறிவியல்புலம் தேசிய விருது, மும்பை மற்றும் கர்நாடக அரசால் வழங்கப்பட்ட அறிவியல் விருது, தமிழ்நாடு எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தால் வழங்கப்பட்ட பி.என்.அப்புசாமி விருது மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றவர்.
இதுல பெரிய ட்விட் என்னான்னா…
நிலவிற்கு சென்று வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்க் இந்தியா வந்தபோது அவரை சந்திக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய எழுத்தாளர் இவர் .
வகுப்பெடுக்கும் போது ஆம்ஸ்ட்ராங்க் பற்றி இவர் சொன்ன ஒரு குறிப்பு ரொம்ப ஆச்சரியமாயிருந்தது..
” மிஸ்டர் நீல் ஆம்ஸ் ஈஸ் வெரி சைலண்ட் பெர்ஸனாலிட்டி, ஒரு நாளைக்கு டென் வேர்ட்ஸ் தான் பேசுவார், தட் டே ஐ சா..”
வகுப்பு முடிந்து நானும் அவரும்….
“ சார், ஆம்ஸ்ட்ராங்கை நீங்க எப்ப மீட் பன்னுனீங்க…”
‘ 1969 ‘
“ அது அவரு நிலாவுக்கு போனவருஷமாச்சே…”
‘ எக்ஜாக்ட்லி, நிலவில் இருந்து திரும்பி வந்தவரு வேர்ல்ட் கண்ட்ரீஸ் எல்லாம் விசிட் வந்தாரு…அப்போது இந்தியாவும் வந்தாரு, அப்பத்தான் மீட் பன்னுனேன்..’
“ எந்த மாசம் என்று நினைவிருக்கா சார்..?…”
‘ ஓ… நவம்பர் 1969…டேட் கூட 7 ஆர் 8 நினைக்கிறேன்…’
“ லாஸ்ட் மந்த் கூட அவரைப் பற்றி ஒரு நீயூஸ் வந்திச்சி, அவர் நிலவில் இருந்து எடுத்து வந்த எல்லாப் பொருள்களையும் அமெரிக்க அரசிடம் திரும்பத் தந்திடல, அதில சில அவரோட ஸ்டோர் ரூம்ல இருந்துச்சுன்னு..”
‘ ஓ..குட்…….யூ ஹேவ் சர்ச்சிங்க் அண்ட் ரீடிங்க் பிஹேவியர்…..பட் இட் ஹேஸ் மோர் இஸ்ஸ்யூஸ் தேர்…’
“ சார்…கேன் ஐ ஹேவ் போட்டோஹிராப் வித் யுவர்செல்ப்…”
‘ யா…வித் ஃப்ளஸர்…’
# வான் நிலா நிலா அல்ல...உன் வாலிபம் நிலா..

No comments:

Post a Comment