Sunday 18 August 2013

சினிமாவும் சில நினைவுகளும்

சினிமாவும் சில நினைவுகளும்....



’ கைதி கண்ணாயிரம் ‘ படம் பார்த்திருக்கீங்களா ?
ஆர்.எஸ். மனோகருக்கு அதுதான் மாஸ்டர் பீஸ்ன்னு நான் நினைக்கிறேன். நான் நாலாவது படிக்கும் போது பார்த்தது. இன்னும் ஞாபகம் இருக்கு. அந்த ரெண்டு பில்டிங் இடையில கம்பியில நடக்கிற சண்டைக் காட்சி ...

இப்ப நினைச்சாலும்...த்ரில்...

*

’ திருவருட் செல்வர் ‘ படத்தில குழந்தை குட்டி பத்மினி அரசனான சிவாஜியிடம் பதில் சொல்வதும், பின் சிவாஜி குட்டி பத்மினியின் காலில் விழுவதும்... மறக்க முடியாதவை

*

’ அருணகிரி நாதர் ‘ படம் ரொம்ப அருமையான படம். கடைசியில அருணகிரி நாதர் கோவில் கோபுரத்திலிருந்து விழுவதும், முருகன் அப்படியே கைகளில் தாங்கி உயிர் தருவதும்.. அப்ப எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

அதிலும் அந்த கூடுவிட்டு கூடுபாயும் காட்சி..

*

’ மாயாபஜார் ‘ படத்தில ரங்காராவ் ‘ கல்யாண சமையல் சாதம்..’ பாட்டில சாப்பிடுற மாதிரி வேணும்னு கேட்டு எங்கப்பாகிட்ட அடி வாங்கினதுதான் மிச்சம். அதுல எங்கப்பா சொன்னது பெரிய காமெடி .. அவரு சொன்னாரு...
‘ அது வேணாம் ... ஏன்னா.. அது எல்லாம் நான் சின்னப் புள்ளையா இருக்கிறப்ப சுட்டது..’

அந்த படத்தில ஜெமினிகனேஷன் வில் அம்புல படி ஏறிப் போறது ...அருமையான கற்பனை...

*

’ நான் சிவப்பு மனிதன் ‘ படம் பார்த்துட்டு சிவப்பு கலர் மப்ளரை கழுத்தில சுத்திக்கிட்டு தீபாவளி துப்பாக்கியில சுருள் பட்டாசு வச்சி சுட்டுகிட்டு திரிஞ்சப்ப பார்த்திருந்திங்கன்னா.. ஏ..யெப்பா...

அப்ப விளையாட்டுல ஒரே ‘ ராபின் ஹீட்டுத்தான் ‘

*

’ முதல் மரியாதை ‘ படத்துக்குத்தான் முதன்முதலில் கார்ல விளம்ப்ரம் பன்னி ‘நோட்டீஸ்’ கொடுத்தாங்க... பின்னாடியே ஓடி மூனு, நாலு வாங்கிடுவேன்... தினமும்...

ஆனால் அந்த நேரத்தில கடைசி வரைக்கும் அந்தப் பட பார்க்கவே இல்லை நான்....

*

No comments:

Post a Comment